search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டீபன் பிளெமிங்"

    • இந்த ஐபிஎல் சீசனில் மீண்டும் பினிஷராக உருவெடுத்துள்ளார் டோனி
    • டோனியின் பேட்டிங் உத்வேகத்தை கொடுக்கிறதல்லவா? இந்த வருடம் வலைப்பயிற்சியில் கூட அவருடைய பேட்டிங் மிகவும் துல்லியமாக இருக்கிறது

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 7 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்தது.

    இந்த சீசனில் மீண்டும் பினிஷராக உருவெடுத்துள்ளார் எம்.எஸ் டோனி. இதுவரை டெல்லி, மும்பை, லக்னோவுக்கு எதிராக 37* (16), 20* (4), 28* (9) ரன்கள் விளாசி அற்புதமாக விளையாடி இருக்கிறார்

    சிஎஸ்கே அணியின் நலனுக்காக தோனி முன்கூட்டியே பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேசியுள்ளார். அதில், "டோனியின் பேட்டிங் உத்வேகத்தை கொடுக்கிறதல்லவா? இந்த வருடம் வலைப்பயிற்சியில் கூட அவருடைய பேட்டிங் மிகவும் துல்லியமாக இருக்கிறது. எனவே அவருடைய ஆட்டத்தை பார்த்து எங்கள் அணி ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் ஆரம்பத்திலேயே நாங்கள் அவருடைய உச்சகட்ட திறமையை பார்த்துள்ளோம். இருப்பினும் சமீபத்திய வருடங்களில் அவருடைய முழங்காலில் பிரச்சனை இருக்கிறது"

    அதிலிருந்து மீண்டு வரும் அவரால் குறிப்பிட்ட சில பந்துகளை மட்டுமே எதிர்கொள்ள முடியும். இங்கே அனைவரும் எங்களைப் போலவே டோனி அதிக நேரம் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புகின்றனர். இருப்பினும் நாங்கள் அவரை தொடர் முழுவதும் விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம். அதற்கு அவர் 2 – 3 ஓவர்கள் விளையாடுவதே சரியாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது.

    அவர் பேட்டிங் செய்ய வரும் போது அற்புதமான சூழ்நிலை ஏற்படுகிறது. அவர் அனைவரையும் மகிழ்விக்கிறார். அந்த வகையில் டோனி சாதித்துள்ள விஷயங்களுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்தியாவுக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் அவர் செய்துள்ளதை பார்த்து எங்களுக்கு ஆச்சரியமில்லை. எங்களுடைய அணியின் இதயத்துடிப்பாகவும் ஒரு அங்கமாகவும் அவர் இருப்பதற்காக நாங்கள் பெருமையடைகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை.
    • பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட்டில் இந்திய அணியை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.

    பென் ஸ்டோக்ஸ்- மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பஸ்பால் எனப்படும் தங்களுடைய அணுகுமுறையை வைத்து வெற்றி காண முடியும் என்பதை இங்கிலாந்து அணி நிரூபித்துள்ளது.

    இந்நிலையில் டோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் போல நானும் ப்ரெண்டன் மெக்கலமும் கற்றுக் கொள்வதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை. ஆனால் அந்த நம்ப முடியாத சிறந்த அணியில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். புனே அணிக்காக விளையாடிய போது நான் டோனி மற்றும் பிளெமிங் ஆகியோருடன் நிறைய விளையாடியுள்ளேன்.

    பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். டோனி ஆட்டத்தில் வெளியே இருப்பது போன்ற உணர்ச்சியை கொண்டிருப்பார். அதே சமயம் சில நேரங்களில் நீங்கள் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது அந்த உணர்ச்சி உங்களுக்கு இருக்காது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சிறந்த புரிதலை கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

    டோனி மற்றும் பிளெமிங் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்வது சம்பந்தமாக அல்லது எந்த முடிவாக இருந்தாலும் அதை வேகமாக எடுப்பார்கள். அது எப்போதும் அணிக்கு நன்மையை ஏற்படுத்துவதாக இருக்கும். அதைத் தான் நானும் மெக்கலமும் எப்போதும் பின்பற்ற முயற்சித்து கடைபிடிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்றதில்லை. இந்த நிலையை இந்தியா தக்கவைத்து கொள்ளுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

    • ஸ்டீபன் பிளெமிங் மற்றும் இயன் பெல் மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோர் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் பணியாற்றினார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேகின்றன.

    இந்நிலையில் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவின் ஒரு பகுதியாக முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் இயன் பெல் மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோர் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர்.

    இந்த மாதம் ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் நியூசிலாந்து அணியுடன் இந்த குழு இணைந்து செயல்படுவர்.

    பிளெமிங் அணியில் இணைவது வீரர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். மேலும் ஊழியர்களுக்கும் நல்லது என நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டோனியின் முழங்கால் காயத்திலிருந்து குணமடைந்து வருவதாகவும், அந்த காயம் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லையாக இருப்பதாக பிளேமிங் கூறினார்.
    • சென்னை அணி அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்திக்கிறது.

    சென்னை அணியின் கேப்டன் டோனியின் முழங்கால் காயம், அவருக்கு தொல்லையையாக இருப்பதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

    சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிளேமிங் கூறியதாவது:-

    டோனியின் முழங்கால் காயத்திலிருந்து குணமடைந்து வருவதாகவும், அந்த காயம் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    மேலும் நேற்றைய போட்டியின்போது காயமடைந்த சிசண்டா மகலா, அடுத்த இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார் எனவும் பிளெமிங் கூறினார். 

    இதனால் சிசண்டா மகலா சென்னை அணியின் அடுத்த 3 போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிகிறது.

    சென்னை அணி அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்திக்கிறது. இந்த போட்டி வருகிற 17-ந் தேதி சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

    • வெளிநாட்டு லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட முடியாது.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அனுமதி அளிப்பதில்லை.

    டி20 உலகக் கோப்பை தொடர் அரையிறுதியில் இந்திய அணியின் தோல்வி பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்திய வீரர்களையும் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட அனுமதித்தால் ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று பல்வேறு நாடுகளிலும் லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை வீரர்கள் பங்கேற்கும் டி20 லீக் தொடர்கள் நடைபெறுகின்றன.

    இந்த தொடர்களில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை விளையாட அனுமதிக்கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்க பிசிசிஐ அனுமதிப்பதில்லை.

    மற்ற நாடுகளின் வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதால் கிடைக்கும் அனுபவம் அவர்களுக்கு அந்தந்த நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாட உதவுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெமிங் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:

    வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிக்க பிசிசிஐ பரிசீலினை செய்து பார்க்கலாம். உலகம் முழுவதும் விளையாடும் வீரர்கள் பலர், இது போன்ற பல உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் மிகவும் முக்கியமான அனுபவத்தைப் பெறுகின்றனர்.

    மெல்போர்ன் ரெனிகேட்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்காக இங்கிலாந்து வீரர் ஹேல்ஸ் விளையாடி உள்ளார். பட்லரும் 2013 முதல் பி.பி.எல்.லில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இந்த அனுபவம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றிக்கு கை கொடுத்துள்ளது.

    இன்னும் இரண்டு ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்த டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக விளையாட அங்குள்ள மைதானங்கள், கால நிலை, பிட்ச் தன்மை உள்ளிட்டவற்றில் அனுபவம் கிடைக்க கரீபியன் பிரீமியர் லீக்கில் இந்திய வீரர்கள் விளையாடினால் அது சிறந்ததாக அமையும். இந்த அனுபவம் நிச்சயம் அங்கு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×